ஈரோடு, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மனைவி முத்தம்மாள் (வயது 80). இவர்களுடைய மகன், மகள்கள் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். இதனால் முத்தம்மாள் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் முத்தம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் காலியானது. இதனால் அவர் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு நபரை உதவிக்கு அழைத்து சிலிண்டரை மாற்றிக்கொடுக்கும்படி கூறினார். அந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். 2½ பவுன் நகை வீட்டுக்குள் வந்த அந்த நபர் கியாஸ் சிலிண்டரை மாற்றிக்கொடுத்தார். இதையடுத்து அவருக்கு முத்தம்மாள் டீ போட்டு கொடுத்தார். டீயை குடித்த அந்த நபர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறிக்க திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து சமையலறைக்கு சென்று அங்கிருந்த மிளகாய் பொடியை எடுத்து தண்ணீரில் கலந்தார். பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் அதை முத்தம்மாள் முகத்தின் மீது ஊற்றி நகையை பறித்தார். இதனால் அவர் கண் எரிச்சல் தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா" என்று அலறிக் கொண்டே வெளியே ஓடினார். வலைவீச்சு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வரு வதை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து நகையுடன் தப்பிச்சென்றார். இதுகுறித்து முத்தம்மாள் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/an-elderly-woman-was-attacked-and-robbed-of-her-jewelry-while-alone-at-home




