திருச்சி, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம்வகுப்பு மாணவி கடந்த 7-4-2022 அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுபற்றி அவருடைய பெற்றோர் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சிறுமி மாயம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை மருங்காபுரி தாலுகா கஞ்சநாயக்கன் பட்டி, செட்டியபட்டி, கோவில்பாறைக்களம் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சின்னையா (வயது 21), கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 20 ஆண்டுகள் சிறை அத்துடன் சின்னையா ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமி மாயம் என்ற வழக்கை மாற்றி, சின்னையா மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சின்னையாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/abduction-and-sexual-assault-of-a-9th-grade-student-youth-sentenced-to-20-years-in-prison




