சென்னை, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் அரசால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கடைகளில் நடத்தப்படும் அதிரடி சோதனைகள் மூலம் பிடிபடும் இத்தகைய பொருட்கள், கோர்ட்டு உத்தரவு மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி குட்காவை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில், சென்னையில் தடையை மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகள் குழி தோண்டி புதைத்து அழித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tonnes-of-gutkha-products-seized-in-chennai-destroyed




