'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அவரையே தொடர்புகொண்டு இந்த பேச்சு குறித்து கேட்டோம். கருப்பையா எம்.எல்.ஏ கருப்பையா கூறியதாவது, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அந்தந்த ஊர்களில் அதன் பாரம்பரியம் மாறாமல் நடப்பது. ஊர் மக்கள் திரண்டு நிற்க வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் அழகு. அதுதான் வீரம். இவர்கள் அந்த விளையாட்டின் தன்மையையே உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஆட்டத்தை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. அப்படி மைதானம் கட்டியதற்கு பதிலாக செலவு செய்து சர்க்கரை ஆலையை திறந்திருந்தால் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்றே கூறினேன். சொல்லப்போனால், நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது. கருப்பையா திமுக ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை என வந்தபோது, ஜெயலலிதா அம்மாவுக்கு கடிதம் எழுதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறேன். மேலும், எங்களின் தவெக இளைஞர்களின் சக்தியால் வென்ற கட்சி. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்படி பேசுவேன். அவையில் எனக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்திருந்தால் தெளிவாக பேசியிருப்பேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/im-a-jallikattu-bull-tamer-myself-mla-karuppaiah-on-his-jallikattu-speech-in-the-tamil-nadu-assembly




