பெங்களூரு, கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவடைந்துவிட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 24-ந் தேதி வெளியிடப்படுகிறது. தேர்தல் கமிஷன் சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. மேலும் 43.80 லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 24 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களின் விவரங்களில் உள்ள குழப்பம். சம்பந்தம் இல்லாத தகவல்களை சரிசெய்ய இந்த நோட்டீஸ் அனுப்பப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது. நோட்டீஸ் 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், அந்த பட்டியலில் பெயர் இருந்தாலும் தந்தை பெயரில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படுகிறது. அதற்கு தேவையான ஆவணங்களும் சமர்ப்பிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் ஆவணங்களை வழங்கி தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/names-of-10-million-voters-to-be-removed-in-karnataka-notices-issued-to-438-million-people




