அற்புத முயற்சியை மேற்கொள்ளும் திரைப்படங்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தனுஷ் ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல், நகைச்சுவை கலந்த கதை புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ரூ.5 கோடி வசூல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் 2 வாரத்தில் ரூ.5 கோடி வசூலித்துள்ளது. இதயத்தை தொட்ட திரைப்படம் ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி தனுஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ ‘மொத ராத்திரி’ என் இதயத்தை தொட்ட திரைப்படம். முதல் முறையாக இயக்குபவரின் இந்த அற்புதமான முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ❤️ தியேட்டர்களில் உங்கள் குடும்பத்துடன் இப்படத்தை காண தவறாதீர்கள்! ” என்று குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-praises-raja-karuppasamys-modha-rathiri-film




