புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நேற்று "தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் உத்தி" குறித்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் தலைமையில், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக அரசு 'பூஜ்ஜிய சகிப்புத் தன்மை' கொள்கையைக் கடைப்பிடித்துள்ளது என்று கூறிய அவர், "2019 முதல் 2026-ம் ஆண்டு வரை, மோடி அரசு 36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகளை (வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்கள்) வெற்றிகரமாக இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வந்துள்ளது” என்றும் தெரிவித்தார். கைது மேலும், சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பின் விளைவாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபட்டிருந்த வலையமைப்பின் 40-க்கும் மேற்பட்ட பிரிவுகள் முறியடிக்கப்பட்டதாகவும், 15 மாநிலங்களில் 350 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் அமித்ஷா, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களை திரும்பக் கொண்டுவரும் முயற்சிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய வலைத்தளத்தையும் தொடங்கி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/288-criminals-from-36-countries-extradited-to-india-amit-shah-announced




