கிஷன் தாஸ், சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீ யூ’ படத்தின் ‘ஏகாந்தம்’ பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘சீ யூ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜுனம் இசையமைத்துள்ளார். கவனம் ஈர்த்துள்ள நாயகன் - நாயகி கூட்டணி நடிகர் கிஷன் தாஸ், சமீபத்தில் வெளியான‘ஆரோமலே’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதேபோல், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும், கமல்ஹாசன் நடித்த 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அண்மையில் அவர் நடித்த ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படமும் வெளியாகி இருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு ‘சீ யூ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். டைட்டில் டீசரை வெளியிட்ட தனுஷ் ‘சீ யூ’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். கிளிம்ப்ஸ் வீடியோ ‘சீ யூ’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எம் எஸ் பாஸ்கர், அருண் குமார், அக்ஷயா, கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாடல் வெளியானது இந்த நிலையில், கிஷன் தாஸ், சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீ யூ’ படத்தின் ‘ஏகாந்தம்’ பாடல் வெளியானது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சக்திஸ்ரீ கோபாலன் இப்பாடலை பாடியுள்ளார். Yegandham - The first single of See U is here ❤️ Do watch it and support! — Kishen Das (@kishendas) September 10, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kishan-dass-see-you-film-first-song-out




