உயரமான இடத்தில் இருந்து கொட்டும் அருவி நீரானது ஆர்ப்பரித்து ஓடிவருவதே ஆறு எனப்படுகிறது. ஆற்றின் நீர் அளவைக் கொண்டு வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. எல்லா ஆறுகளிலும் மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் அதிகமான நீரோட்டம் இருக்கும். கோடையில் நீரோட்டம் குறைவாக இருக்கும். சில ஆறுகள் கோடையில் வறண்டு விடும். இந்தநிலையில், ஆறுகள் சில இடங்களில் பாம்பு போல வளைந்து நெளிந்து காணப்படும். அதற்கு மண் அரிப்பு மற்றும் படிவுகளின் இயற்கையான சுழற்சியே முக்கிய காரணமாகும். ஆற்றில் ஒரு வளைவு உருவாகத் தொடங்கும்போது, வளைவின் வெளிப்புறக் கரையில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு அரிப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இரு க்கும் மண் மற்றும் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், வளைவின் உட்புறத்தில் நீரின் வேகம் குறைவாக இருப்பதால், மணல், சேறு உள்ளிட்ட படிவுகள் அங்கு தேங்குகின்றன. காலப்போக்கில், வெளிப்புறக் கரை தொடர்ந்து அரிக்கப்படுவதும், உட்புறத்தில் படிவுகள் சேர்வதும் ஆற்றின் வளைவை மேலும் பெரிதாக்கி, அதன் பாதையை மாற்றுகின்றன. இவ்வாறு உருவாகும் வளைந்த பாதைகள் 'ஆற்று வளைவுகள்' எனப்படுகின்றன. சமதளமான நிலப்பகுதிகளில் பாயும் ஆறுகளில் இத்தகைய வளைவுகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆறுகளின் நீள, அகலம் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பயன்பாடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/why-do-rivers-bend-like-snakes-do-you-know



