மைசூரு, பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கர்நாடகாவின் மைசூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். அவருக்கு வயது 88. இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாசார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக இருந்தன. அவை, ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. ஆழ்ந்த இரங்கல் அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும். இந்தத் துயர நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/s-janakis-death-a-great-loss-to-the-music-world-pm-modi-condoles




