புதுடெல்லி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குவின்சி டி'சோசா வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். 12-11 என முடிந்த 2 செட்கள் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுய்னா சகாமோட்டோவை குயின்சி எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள யுய்னா சகாமோட்டோவுக்கு எதிராக குவின்சி டி'சோசா கடுமையாக போராடினார். ஆனாலும், சகாமோட்டோ 12-11, 12-11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சகாமோட்டோ வெண்கலப் பதக்கத்தை வென்றார். குவின்சி டி'சோசா 4-வது இடத்தைப் பிடித்தார். சகாமோட்டோவை வீழ்த்திய குவின்சி தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற குவின்சி, குழு சுற்றில் சகாமோட்டோவையே வீழ்த்தி அசத்தியிருந்தார். அந்த ஆட்டத்தில் குவின்சி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு வாய்ப்பு மகளிர் ஒற்றையர் பிரிவில் பதக்கத்தை தவறவிட்டாலும், குவின்சியின் ஆசிய விளையாட்டுப் போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர் தற்போது முகமது அனாஸ் இம்ரானுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் களம் காண உள்ளார். இதில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வியட்நாம் ஜோடியை எதிர்கொள்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-teqball-quincy-dsouza-misses-out-on-the-bronze-medal-one-more-chance




