வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தேர்தல் கமிஷனர்களுக்கு இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தலைமை தேர்தல் கமிஷனரை கடுமையாக சாடி வருகின்றன. அதேநேரம் மேற்கு வங்காள பா.ஜனதா முதல்-மந்திரியான சுவேந்து அதிகாரி, தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை செய்தியாளர்களிடம் காட்டி அவர் கூறியதாவது:- மம்தா பானர்ஜி வழக்கு மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் வெற்றியை ஏற்க முடியாதவர்கள் தான் போலியான அறிக்கையை காட்டி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தேர்தல் கமிஷனர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை என்பதையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முடிவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என்பதையும் இந்த புகைப்படமே நிரூபிக்கிறது. மேற்கு வங்காளத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜிதான் பொறுப்பு. பா.ஜனதாவோ, தேர்தல் கமிஷனோ அல்ல. அவர் பதிவு செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீதித்துறை அதிகாரிகள்தான் இந்த முடிவை எடுத்தனர். ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளும் சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் நடந்தபோதும் நீங்கள் (மம்தா) தேர்தலில் தோற்றதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறீர்கள். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக தாக்குதலை நடத்துகிறீர்கள். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். கேரளாவில் சரி, மேற்கு வங்கத்தில் தவறா? கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியாக நடந்திருந்தது என் றால், மேற்கு வங்காளத்தில் மட்டும் எப்படி தவறாக இருக்கும்? நாங்கள் 208 இடங்களை வென்றோம். திரிணாமுல்லும், கூட்டணிகளும் 80 இடங் களை பெற்றன. மம்தாவால் இந்த முடிவை ஏற்க முடியவில்லை.மாநில தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளன. எனவே வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்புகின்றன.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முடிவுகள் அனைத்தும் தலைமை தேர்தல் கமிஷனர் மட்டும் எடுத்ததல்ல என்பதை நேற்று (நேற்று முன்தி னம்) நடந்த 3 தேர்தல் கமிஷனர்களின் ஆலோசனை கூட்டமும், பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையும் உறுதி செய்கின்றன.இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/mamata-banerjee-herself-is-responsible-for-the-deletion-of-27-lakh-voters-in-west-bengal-suvendu-adhikaris-allegation




