சென்னை, கவிஞர் வைரமுத்து இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரித்துள்ளார். 1980ம் ஆண்டில் பாராதிஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியாரக அறிமுகமாகி, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். இதுவரை சுமார் 8000 பாடல்களை அவர் எழுதி இருக்கிறார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, கவிதைகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிச் சாதனை படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதினை வைரமுத்து ஏழு முறை பெற்றிருக்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு’ நாவல் கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. பிறந்தநாள் வாழ்த்து இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் “பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு ” என்று குறிப்பிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஞானபீட விருது கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ‘ஞானபீட விருது’ டெல்லியில் இன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, இந்தியாவில் இலக்கியத்திற்கென வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெறும் சிறப்பை பெறுகிறார். சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு. — Kamal Haasan (@ikamalhaasan) July 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamal-haasan-wishes-vairamuthu-a-happy-birthday




