சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,600 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையின் இந்த உயர்விற்கான காரணத்தைச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். > அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்அடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்! > போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத்தன்மை இருந்து வருகிறது. > தற்போது ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. > உலக வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது. > ஆப்ஷன் டிரேடிங், இ.டி.எஃப் போன்றவற்றிலும் உலக முழுவதும் தற்போது தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். > இறுதியாக, பணவீக்கத்திற்கான அச்சம். இவற்றால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் நிலவும் தற்போதைய சூழலில், தங்கம் விலை இன்னும் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-surges-in-chennai-why-rates-are-rising


