சென்னை, 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் பிரச்சினையால் தள்ளிப்போனது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், மீண்டும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிப்போனது. படத்திற்கு 'ஏ' சான்றிதழ் இதையடுத்து, சமீபத்தில் இப்படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், படத்தில் சில காட்சிகளை நீக்கவும், சிலவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஜூலை 23-ல் ரிலீஸ் இந்நிலையில்,, 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்று கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jananayagan-starring-minister-vijay-to-be-released-on-the-23rd




