சென்னை, முதல்-மந்திரிகள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். மேலும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுகவேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லை தெரியாது. கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுகிறது. கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். நாங்கள் புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு கர்நாடகாவின் கொள்கைகள். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முக்கிய திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளிநீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-should-unite-us-not-divide-us-dk-shivakumar-speech




