கவுகாத்தி, அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மலைப்பகுதியில் மதஹரியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நிலச்சரிவு இந்நிலையில், அந்த மலைப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த வீடு மண்ணுக்குள் புதைந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி, தம்பதியின் மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், தம்பதியின் மகன் படுகாயமடைந்தார். இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த நிலச்சரிவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/landslide-in-assam-three-family-members-killed




