சென்னை, த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு 'செக்' வைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் வகுத்துள்ளார். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு 59 இடங்களும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வுக்கு 47 இடங்களும், அரசியலுக்கு புது வரவான த.வெ.க.வுக்கு 108 இடங்களும் கிடைத்தன. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அக்கட்சிக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகியவை ஆதரவு அளித்ததால், 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் 10-ந் தேதி, தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய்யும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் கட்சித் தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக் கொண்டு, 'செக்' வைத்து தடுத்தார். 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர், அடுத்தடுத்து தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்பட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தி.மு.க.வில் இணைந்தார். இதுபோக, அ.தி.மு.க.வுக்குள்ளேயே இன்னும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர். புதிய வியூகம் இதனால், தனக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு செக் வைக்க எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் வகுத்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது, அதி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க. மற்றும் தி.மு.க.வுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்குள் இருந்து கொண்டே தனக்கு எதிராகக் குடைச்சல் கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது செய்த முறைகேடுகள் மற்றும் பினாமி சொத்துக்கள் அடங்கிய ரகசிய ஊழல் ஆவணங்களை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குடைச்சல் கொடுத்தவர்களுக்கே குடைச்சல் இந்த ஆவணங்களை எடப்பாடி பழனிசாமி, டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு ரகசியமாக அனுப்பிவைத்து, அதன் மூலம் அவர்களுக்கே குடைச்சல் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அ.தி.மு.க. உள்கட்சிக்குள் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-checks-former-aiadmk-ministers-who-joined-the-tvk-do-you-know-what




