ஜகார்தா, இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. இந்நிலையில், இந்தோனேசியாவின் மலுகு தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலுகு தீவில் இருந்து 162 கிலோ மீட்டர் வடகிழக்கே பண்டா கடலில் 143 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 6.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அருகே உள்ள தீவுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/powerful-earthquake-in-indonesia-4




