சென்னை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”மக்களின் மனதில் என்றும் அழியாத இடத்தைப் பெற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் பாரத ரத்னா, பத்ம விபூஷன், மற்றும் பத்ம பூஷன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. “கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் இன்று வரை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்கமாகவும் திகழ்கின்றன. அறிவு, எளிமை, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றின் ஒளிவிளக்காக அவர் என்றும் வாழ்கிறார். அவரது உயரிய சிந்தனைகளும், தன்னலமற்ற சேவையும், இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் கண்ட கனவும் தலைமுறைகள் தழுவி நம்மை வழிநடத்தட்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/abdul-kalams-death-anniversary-nainar-nagendran-pays-tribute




