மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் காரில் மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருமங்கலம் திரும்பியுள்ளனர். அவர்கள் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன் பக்க டயர் வெடித்ததில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்துள்ளது. இதில் மின்வாரிய ஊழியர் பாரதிராஜா, ஐ.டி. ஊழியர் சரண் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-caused-by-a-burst-car-tyre-on-the-virudhunagar-thirumangalam-four-lane-highway




