ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லை. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அவர்கள், வாடகை வீட்டில் மாடியில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து அதிக அளவில் சத்தம் வந்ததால், வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்குச் சென்று என்னவென்று பார்த்தார். அங்கு ராஜேஷ் வயிற்றில் பலத்தக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமலா ராஜேஷ் உடலில் இருந்து வெளியே வந்த குடலை ஒரு பையில் போடுவதை வீட்டு உரிமையாளர் ரிங்கு பார்த்தார். வீட்டு உரிமையாளரைக் கண்டதும், விமலா பீதியடைந்து மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். வீட்டு உரிமையாளர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ராஜேஷ் மற்றும் விமலாவை மருத்துவமனையில் சேர்த்தனர். விமலா சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷ் இறந்து போனார். பிரேத பரிசோதனையில் ராஜேஷின் வயிறு கூர்மையான ஆயுதங்களால் சுமார் 35 சென்டிமீட்டர் வரை வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரது குடல் வயிற்றிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் அவரது கல்லீரலின் கணிசமான பகுதி மற்றும் வலது சிறுநீரகத்தை காணவில்லை என்பதும் தெரியவந்தது. காணாமல் போன உறுப்புகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/wife-kills-husband-removes-his-intestines-stuffs-them-in-a-bag-and-jumps-from-the-terrace




