சென்னை, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசியதாவது; தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசும் அரசியல் நமக்கு எதற்கு? பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும். ஒரு சாம்பிள் பார்க்கலாமா? “என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு திமுகவினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விபரங்களை படிக்கிறேன். விசாரணை கமிஷனின் அறிக்கையில் நிறைய கூத்துக்கள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்களை மக்களுக்கு சொல்ல வேண்டும். முழூசா படிக்க 2 நாள் ஆகும். அதனால் சுருக்கமாக கூறுகிறேன். சர்க்காரியா கமிஷன் -1977 சர்க்காரியா கமிஷன் -1977: திமுக ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவனையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது. கட்சி நிதி கட்சி நிதி குறித்து திமுகவின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் திமுக. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இரண்டு துறைகளின் பைல்ஸ்களை திறந்தாலே இந்த நிலைமை என்றால், இன்னும் சில பைல்ஸ்களை திறந்தால் எத்தனை பூதங்கள் வெளிவருமோ? ஊழல்கள் இருக்குமிடத்தில் திமுக திமுக இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். திமுக இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் திமுக இருக்கும். ஆதாரம் வேண்டும் என்றீர்களே. போதுமா. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் திமுக 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே திமுகவினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா? கடந்த திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பயன்பாடு இருந்தன. சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது. மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். 1967ல்அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்." இவ்வாறு திமுகவின் ஊழல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/these-are-the-acts-of-corruption-committed-by-the-dmk-chief-minister-vijay-spoke-vehemently-backed-by-evidence




