சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த ஜூலை 9-ம் தேதி குட்கா வழக்கில் கைதாகி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி, சிறையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மாற்றுத் திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக, குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் போராடுகின்றனர். கடும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பும் இச்சம்பவத்தின் மீது ஜோசப் விஜய் அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். லாக்-அப் மரணம் காரணம், தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்படுபவர்களுக்கு அவ்வப்போது கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதும், “பாத்ரூமில் வழுக்கி” விழுந்துவிட்டதாக காவல்துறை அதை மழுப்புவதும், “கைதிகள் செல்லும் கழிவறைகள் மட்டும் தான் எப்பொழுதும் வழுக்குமா” என நீதிமன்றங்கள் கண்டிப்பதும் தொடர்கதையாகி வரும் நிலையில், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை நம்மால் எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. காரணம், திருப்புவனம் அஜித்குமாரின் லாக்-அப் மரணம் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. அவரைப் போன்றோரு இன்னொரு அப்பாவியை இழக்க தமிழகம் தயாராக இல்லை. வலியுறுத்தல் எனவே, விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணத்தின் உண்மைக்காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டுமெனவும், சிறையில் உள்ள கைதிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/do-lock-up-deaths-continue-under-the-tvk-regime-nainar-nagendran-asks




