திருச்சி, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2 முறை எண்ணப்படும். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும். கோவில் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ. 77 லட்சத்து 16 ஆயிரத்து 600-ம், 1 கிலோ 315 கிராம் தங்கமும், 1 கிலோ 540 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நோட்டுகள் 172-ம், வெளிநாட்டு நாணயங்கள் 1081-ம் கிடைத்தது. மேலும் பித்தளை பொருட்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/offerings-collected-via-the-temple-hundi-offering-box-at-the-samayapuram-mariamman-temple-amounted-to-77-lakh-in-cash-and-131-kg-of-gold




