Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன். சாப்பிட்டும் மலச்சிக்கல் தீரவில்லையே ஏன்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன். இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன் மலச்சிக்கல் சரியாக வேண்டுமென்றால் நார்சத்து (Fiber) மட்டும் சாப்பிட்டால் போதாது. நார்ச்சத்து பலனளிக்க வேறு சில விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த விஷயங்களில் தண்ணீருக்கே முதலிடம். நார்சத்து சரியாக வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால், நார்சத்து குடலில் மலத்தை இன்னும் கடினமாக்கி மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும். எப்போதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு குடல் இயக்கம் (Bowel Motility) மந்தமாகும். எனவே, தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். கழிவறை பழக்கம் (Bowel Habit Training) சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவுக்குப் பிறகு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், அதைத் தாமதப்படுத்தாமல் உடனே கழிவறைக்குச் செல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து தினமும் கடைப்பிடித்தால் குடல் ஒரு கடிகாரம் போலச் செயல்படத் தொடங்கும். நார்சத்துள்ள உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, சரியான கழிப்பறை பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்தால் தான் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.Doctor Vikatan: மலச்சிக்கல் பாதிப்பு; குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் திரிபலா பொடி உதவுமா? தைராய்டு, சர்க்கரை நோய் (Diabetes), ஐபிஎஸ் (IBS), சிறுநீரகப் பிரச்னைகள் அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். நார்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகும் இரண்டு வாரங்களுக்கு மேல் மலச்சிக்கல் தொடர்ந்தால் அல்லது மலத்தில் ரத்தம், திடீர் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சுருக்கமாகச் சொன்னால், நார்சத்துள்ள உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, சரியான கழிப்பறை பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்தால் தான் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/health/chronic-constipation-despite-a-high-fiber-diet-what-is-the-cure




