பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, 'பெத்தி' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வருகை தந்தார். பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராம் சரண் இதையடுத்து நேற்று அம்மருத்துவமனை தலைவரும், எலும்பியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ். ராஜசேகரன் தலைமையில் ராம் சரணுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிகிச்சையின்போது, நடிகர் சிரஞ்சீவி, சுரேகா கொனிடேலா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்தனர். இந்த நிலையில் ராம் சரணுக்குச் சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், ராம் சரண் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் ராம் சரண், வருகின்ற 30ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராம் சரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. ராம் சரண் Bodyguard சம்பளம் ஒரு நாளுக்கு 4 லட்சமா? - யார் இந்த கெவின் குண்டா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/tollywood/when-will-actor-ram-charan-will-be-discharged-from-coimbatore-hospital




