அசோக் செல்வன் நடித்திருக்கும் 'அன்பில் அவன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். `அன்பில் அவன்' படத்தில். இந்தப் படம் குறித்து அசோக் செல்வனின் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் கூறியது பற்றி அசோக் செல்வன், "இந்தப் படம் உருவான காலத்தில் இருந்தே அவங்களுக்கு இந்தக் கதை தெரியும். இதற்காக நாங்க எவ்வளவோ உழைச்சிருக்கோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். படப்பிடிப்புத் தளத்திற்கும் வந்திருக்காங்க. படம் அவங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. அவங்களும் கலைத்துறையில இருக்குற ஒரு கலைஞர் என்பதால், இந்தப் படத்தை எப்படிப் பார்க்கணுமோ அப்படிச் சரியாகப் பார்த்தாங்க." என்றவரிடம் செய்தியாளர், படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் தந்த அசோக் செல்வன், "நாங்க இரண்டு வருஷம் கடினமாக உழைத்துத் தான் ஒரு படத்தை எடுத்திருக்கோம். ஆனா, அந்த முத்தக் காட்சியைப் பத்தியே ஏன் மூணு பேர் கேட்குறீங்க? எனக்கு உண்மையிலேயே புரியல. அதைத் தவிர வேற எதுவுமே உங்களுக்குக் கேட்கத் தோணலையா? படம் குறித்து ஏதேனும் நல்ல கேள்விகள் இருந்தா கேளுங்க, பேசலாம்." எனப் பதிலளித்தார். `அன்பில் அவன்' படத்தில். அடுத்து ஆக்ஷன் படங்கள் செய்வது பற்றிய திட்டம் குறித்து அசோக் செல்வன், "'ப்ளூ ஸ்டார்' படத்திலயும் கதைக்கு என்ன தேவையோ, அதைத்தான் செய்திருந்தோம். எல்லாமே கதைதான் முடிவு செய்யும். அடுத்து ஒரு காதல் கதையில நடிக்க நேர்ந்தால், அதில் ஆக்ஷனே இல்லை என்றாலும் நடிக்க நான் தயார். 'ஆக்ஷன் ஹீரோவாக' மாறணும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குக் கொடுக்கணும், அவ்வளவுதான். ஆக்ஷன் களத்தை நான் இதுவரை பெருசா முயற்சித்துப் பார்த்ததில்லை, அதனால் இதில் முயற்சி செய்து பார்க்கலாம்னு தோணுச்சு, பண்ணியிருக்கேன்." எனப் பதில் தந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/ashok-selvan-anbil-avan-press-meet-preity-mukundan



