புதுடெல்லி, அயர்லாந்து தொடரில் இரண்டு 20 ஓவர் போட்டியிலும் தோல்வி கண்ட இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்திய அணியின் மோசமான செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கிரிக்கெட் வாரியம் இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா அளித்த ஒரு பேட்டியில், 'இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. இந்திய அணியின் செயல்பாட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது. ஆய்வு கூட்டம் வருகிற 19-ந் தேதி ஒருநாள் போட்டி தொடர் முடிந்து அணி நாடு திரும்பியதும், இங்கிலாந்து தொடரில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய நாங்கள் இந்திய அணியின் முக்கிய உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்துவோம். அதேசமயத்தில் அவசர கோலத்தில் எந்த முடிவும் எடுக்கமாட்டோம்' என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/indian-cricket-board-to-review-t20-teams-bad-phase-after-england-defeats




