உத்தராகண்ட், உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தை சேர்ந்த ரவி தம்தா என்ற இளைஞர், ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’என்ற பெயரில் தனிநபர் பறக்கும் மின்சாரக்காரை உருவாக்கி அசத்தியுள்ளார். இதன் முதற்கட்ட மாதிரி சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மின்சார வாகனம் இந்த கார் இயங்குவதற்கு பெட்ரோல், டீசல் அல்லது எத்தனால் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை. அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத செங்குத்தான மலை கிராமங்களுக்கு எளிதாக செல்ல இது உதவும். வெள்ளம் மற்றும் பனிச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனுமதி பெற வேண்டும் தற்போது இந்த வாகனம் மாதிரி வடிவிலேயே சோதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக, இன்னும் பல கட்ட சோதனைகளும், மத்திய-மாநில அரசுகளின் முறையான அனுமதிகளும் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/flying-electric-car-test-successful-in-uttarakhand




