நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப்போட்டியில் சபலென்காவை வீழ்த்தி ரைபகினா பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா மற்றும் எலினா ரைபகினா மோதினர். இருவரும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இது 3-வது முறையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ரைபகினா, சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால், அதற்கு பழிதீர்க்கும் வகையில், சபலென்கா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இந்த நிலையில், போட்டியின் முதல் செட்டை (6-4) ரைபகினா கைப்பற்றினார். இதனால், அடுத்த செட்டில் வெற்றி பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும், (5-7) 2-வது செட்டை சபலென்கா கைப்பற்றினார். வெற்றி பெறும் செட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் ரசிகர்கள் போட்டியை ரசித்தனர். அப்போது, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை ரைபகினா எளிதில் வீழ்த்தி பட்டம் வென்றார். ரைபகினாவுக்கு மொத்தத்தில் இது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். மற்றும் நடப்பு ஆண்டில் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இந்த ஆண்டின் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர், சபலென்காவுக்கு எதிராகவே விளையாடி, அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-rybakina-beats-sabalenka-wins-title




