வாஷிங்டன், எச்.1 பி விசா கட்டண உயர்வு மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.95 லட்சம்) உயர்த்தி உத்தர விட்டார். 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இருந்த எச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த பல்வேறு மாகாண கோர்ட்டுகள், விசா கட்டண உயர்வுக்கு தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்து உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட எச்-1பி விசா கட்டண உயர்வு உத்தரவு இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் எச்-1பி விசாக்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் மீதான 1 லட்சம் டாலர் கட்டணத்தை ஜனாதிபதி டிரம்ப் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், விசா கட்டண உயர்வு முடி வால் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் எச் பி பதிவு எண் ணிக்கையில் 92 சதவீத சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த சுட்டண உயர்வை நீட்டிப்பது, அமெ ரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன் களைத் தொடர்ந்து பாது காக்கும். அமெரிக்க ஊழியர்கள் மற்றும் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் வாய்ப்புகளை மேம்படுத்தும் தேவைப்படும்போது மிக உயர்ந்த திறன். கொண்ட மற்றும் அவசியமான வெளி நாட்டு ஊழியர்களை மட்டுமே நிறுவனங்கள் பணிய மர்த்துவதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். எச்-1பி விசா திட்டத்தில் இந்தியர்கள் அதிகளவில் பயன் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/trump-extends-h-1b-restrictions-what-does-the-100000-fee-mean-for-indian-professionals




