உனா இமாசல பிரதேசத்தில் எருமை மாட்டின் வயிற்றில் இருந்து 66 உலோகங்கள் அகற்றப்பட்டன. இமாசல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் பரேவால் கிராமத்தில் வசித்து வருபவர் கர்னைல் சிங். இவர் வளர்த்து வரும் எருமை மாடு ஒன்றுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. அதன் சுவையுணர்வும் குறைந்து விட்டது. உணவு எதுவும் சாப்பிடாமல் மந்தமாக இருந்து வந்தது. அதனுடன், 9 மாத கர்ப்பமாக உள்ளது. அதனால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாட்டை கூட்டிச்சென்று காட்டினார். ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், மாட்டின் வயிற்றில் நிறைய உலோக பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 66 பொருட்கள் இதையடுத்து, கால்நடை டாக்டர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து ஆணிகள், ஒயர்கள், சிறிய உலோக துண்டுகள் உள்பட 66 பொருட்களை அகற்றினர். இதன்மூலம் மாட்டின் உயிர் காப்பாற்றப்பட்டது. தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் சிகிச்சையில் வைத்து கண்காணிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். குப்பை கிடங்கு அருகே மேயும்போதும், சில சமயங்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும் இதுபோன்று அவை தவறுதலாக உலோக பொருட்களையும் சேர்த்து உண்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/himachal-pradesh-66-items-including-nails-metal-pieces-removed-from-buffalos-stomach




