ஜாம்ஷெட்பூர் ஜார்கண்ட் சாலை விபத்தில் மந்திரி மகள் உள்பட 4 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு 10 மணியளவில் லாரி ஒன்று பழுதடைந்து சாலையோரம் நின்று விட்டது. இந்த நிலையில், அந்த வழியே கார் ஒன்று சென்றுள்ளது. விபத்து அந்த கார் திடீரென லாரியின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், காரில் இருந்த 4 பேரும் பலியாகி விட்டனர். அவர்கள் அனைவரும் சோனாரி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஜார்கண்ட் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான மந்திரி தீபிகா பாண்டே சிங்கின் மகள் ஆவார். இந்த சம்பவத்தில் பலியான தீபிகாவின் மகள் உள்பட 4 பேருக்கும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/jharkhand-road-accident-claims-4-including-ministers-daughter




