துபாய், 8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனமுதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக்கில் ஹாங்காங்குடன் மோதுகிறது. இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கோப்பை போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மிகப்பெரிய பலமாக அமைந்தார். அவர் சதம் விளாசினார். வெறும் 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 14 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் விளாசினார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.இதையடுத்து ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-smriti-mandhana-scores-a-century-team-india-piles-up-193-runs




