பெரம்பலூர், சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் நள்ளிரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. தீ விபத்து அப்போது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், பயணிகள் அனைவரும் வேகவேகமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் எற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-omni-bus-theeppatri-erinthu-vibathu




