இந்தியாவில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கூடுதலாக திறக்க தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி 2026-27 கல்வி ஆண்டிற்கான புதிய இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 7 அரசு மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 25 புதிய கல்லூரிகளள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்குடியில் தனியார் மருத்துவக் கல்லூரி இதன் மூலம் நாடு முழுவதும் மருத்துவம் படிப்பதற்கு கூடுதலாக 2,400 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். அதில் 2,000 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், மருத்துவ வசதிகளும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் உயரும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 5 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. திருச்சி முதல் நாகை வரை தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவின் படி 2026-27ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் புதிதாக வர உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றை டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தொடங்குவதற்கு அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது. medical council of india பெண் பேராசிரியரான ராதிகா மணிமாறன் என்பவர் அறக்கட்டளை பெயரில் ரிஷியூரில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என்கிறார்கள். இவரது கணவர் மணிமாறன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வந்தவர். ஐந்து தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பில் பேராசிரியர் ராதிகா மணிமாறன், தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான அனுமதியை பெறுவதற்கு மத்திய அரசிடம் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து தீவிரமாக மெனக்கெட்டு வருகிறார். அதே நேரத்தில், மன்னார்குடியில் இரு அரசியல் கட்சிகளை சேர்ந்த இரண்டு அரசியல் பெரும்புள்ளிகளும் தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். இதில் அரசியல் குறுக்கீடுகளை தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் விரும்பவில்லை என்கிறார்கள். எனவே, தொண்டு நிறுவனத்தின் மூலம் தொடங்குவதற்கு விண்ணப்பித்துள்ள ராதிகா மணிமாறனுக்கு அனுமதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளே உள்ளதாக சொல்கிறார்கள். மன்னார்குடியில் தனியார் மருத்துவக் கல்லூரி அமையும்பட்சத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்காது. உயர்தர மருத்துவ வசதிகள் உள்ளூரிலேயே கிடைக்கும். விபத்து மற்றும் அவசர காலங்களில் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் சிறிய நகரங்களுக்கும் வருவார்கள். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். டெல்டாவைச் சேர்ந்த டாக்டருக்கு படிக்கக்கூடிய பல மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் விடுகளில் தங்கி படிக்கின்றனர். மன்னார்குடியில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்து விட்டால் உள்ளூரிலேயே டாக்டருக்கு படிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/private-medical-college-in-mannargudi-delta-area




