சென்னை, வெற்றிச்செழியன் இயக்கிய ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இயக்குநராக அறிமுகமாகும் வெற்றிச்செழியன் இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், ‘தி கிராண்ட் மாஸ்டர்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். மகனின் கனவை நனவாக்கும் தாய் தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியானது டிரெய்லர் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ வருகிற செப்டம்பர் 25ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-the-grandmaster-has-been-released




