புதுடெல்லி, டெல்லி பிரீமியர் லீக் (DPL) 2026 போட்டியில், கள நடுவர் தர்மேஷ் பரத்வாஜ் முகத்தில் பந்து பலமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். எவ்வாறு நிகழ்ந்தது? டெல்லி பிரீமியர் லீக் (DPL) 2026 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூ டெல்லி டைகர்ஸ் - ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிகள மோதின. இதில், நியூ டெல்லி டைகர்ஸ் பேட்டிங் செய்தபோது 18வது ஓவரில், ஆசிஷ் மீனா வீசிய பந்தை பேட்ஸ்மேன் லக்சய் தரேஜா நேராக 'ஸ்ட்ரெய்ட் டிரைவ்' அடித்தார். அந்த பந்து நடுவர் தர்மேஷ் பரத்வாஜின் முகத்தில் பலமாகத் தாக்கியது. மருத்துவ சிகிச்சை உடனடியாக மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். போட்டி முடிவு இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 193 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூ டெல்லி டைகர்ஸ் அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/dpl-umpire-dharmesh-bhardwaj-hit-in-the-face-by-a-ball-admitted-to-icu-east-delhi-riders-beat-new-delhi-tigers-by-36-runs




