சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வருகிற 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மராட்டிய மாநிலம் லோகமான்ய திலக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திண்டுக்கல் செல்லாது. குருவாயூரில் இருந்து வருகிற 12-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), விருநகர், மானாமதுரை, காரைக்குடி. திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக காச்சிகுடா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-guruvayur-express-to-run-on-an-alternate-route




