சென்னை, புதுச்சேரியில் 2026 ஆகஸ்ட் 1 முதல் 10 வரை இந்திய ராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- ஆன்லைன் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியில் இணைய கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. ராணுவத்தின் சென்னை ஆள்சேர்ப்பு மண்டலத் தலைமையகம், சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்களின் உதவியுடன் இம்முகாமை நடத்துகிறது. முகாம் ஏற்பாடு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தமிழ்நாட்டைச்சேர்ந்த 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கலாம் மேலும், சிப்பாய்-மருந்தாளுநர், சோல்ஜர் என்.ஏ/என்.ஏ (கால்நடை மருத்துவம்), கல்வி மற்றும் சமய ஆசிரியர் - ஜூனியர் கமிஷன்டு அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த, ஆன்லைன் தேர்வில் தகுதிபெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். அனுமதி அட்டை கடந்த ஜூன் 1 முதல் 12 வரை நடத்தப்பட்ட இணையவழி பொது நுழைவுத் தேர்வின் (CEE) முடிவுகள் ஜூலை 13 அன்று "Join Indian Army" இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க தகுதியுடையவர்கள்; இதற்கான அனுமதி அட்டை அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். சிரமங்களை தவிர்க்க விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு செயல்முறையின் இரண்டாம் கட்டத்திற்கு தாமதமின்றி தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இரண்டாம் கட்டத்தில் உடல் தகுதித் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை அடங்கும். ஆள்சேர்ப்பு முகாமின் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள், என்.சி.சி அல்லது விளையாட்டு சான்றிதழ்கள் இருப்பின் அவை மற்றும் பிற அடிப்படை ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். வெளிப்படையானது ஆட்சேர்ப்பு செயல்முறை நியாயமானது, வெளிப்படையானது மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது என்று இந்திய ராணுவம் மீண்டும் வலியுறுத்துகிறது. ஆட்சேர்ப்பு செய்வதாக உறுதியளிக்கும் தரகர்கள் அல்லது நேர்மையற்ற நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய ராணுவத்தில் தேர்வு என்பது, தகுதி மற்றும் செயல்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/agniveer-recruitment-camp-puducherry-august-2026




