சென்னை, உதயநிதியை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும். உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முதல்-அமைச்சர் குறித்தோ எந்த திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை. அரசியல் காரணங்களுக்காக திருத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. நாளை சட்டசபை கூடும் நிலையில், திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், "உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார். இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-should-be-interrogated-and-released-today-chennai-high-court




