கேப்டவுன் தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அவர், ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 17 தங்கப்பதக்கங்களும் வென்று இருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 5 முறை பங்கேற்று இருக்கும் அவர் 7 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 21 பதக்கங்கள் குவித்துள்ளார். அதிக பதக்கம் அந்நாட்டின் கேப் டவுன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கிளோஸ், 100 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் மெட்லே ரிலேவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் காமன் வெல்த் விளையாட்டு வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் அவர் 21-வது பதக்கம் வென்று சாதித்த ஜூலை 30-ல் அவரது வீடு தீக்கிரையானது. இதில், அவருடைய வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து போய் விட்டது என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் வேதனையை பதிவிட்டுள்ளார். 10 வருடங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக அந்த குடியிருப்பில் அவர் வசித்திருக்கிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முதியவர் ஒருவர் தீ விபத்தில் பலியானார். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/south-african-swimming-star-house-destroyed-in-fire-elderly-person-killed




