லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரை சேர்ந்தவர் பல்லவி சிங். இவர் டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பழகி வந்துள்ளார். இவர் முதலில் தன்னுடன் பழகும் நபருடன் சாதாரண நட்புடன் பழக தொடங்குவார். பின்னர் அவரை நெருக்கமான உறவாக மாற்றி விடுவதில் கில்லாடி. தனது வலையில் விழும் அந்த சபலபுத்தி ஆண்களுடனான ரகசிய அறையில் சந்திக்கும் சூழ்நிலை அமைத்து கொள்வார். அதைத்தொடர்ந்து அவர்களுடன் இருக்கும் தனிப்பட்ட அந்தரங்க புகைப் படங்களையும் மற்றும் வீடியோக்களையும் ரகசியமாக எடுத்து வைத்துக் கொள்வார். ரூ.6 கோடி பறிப்பு பின்னர், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருடன் பழகிய சபலபுத்தி ஆசாமிகளிடம் காட்டி பணம் தருமாறு மிரட்டுவார். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி போன்ற கடுமையான குற்ற வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டுவதை பல்லவி சிங் வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் வலையில் சிக்கிய சில தொழில் அதிபர்களும், பணக்கார புள்ளிகளும் வழக்கு, விசாரணைக்கு பயந்து பல்லவி சிங்கிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக தெரிகிறது. அவ்வாறு பணம் தராமல் இவருக்கு 'டிமிக்கி' கொடுக்க நினைக்கும் ஆண்கள் மீது போலீசில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பலவகையான வழக்குகளில் சிக்கவைத்து உள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.6 கோடிக்கும் மேலாக பணம் பறித்து பல்லவிசிங் குவித்து வைத்தது தெரியவந்துள்ளது. ஐகோர்ட்டு வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மெத்தையில் கட்டுக்கட்டாக பணம் இதற்கிடையே, ஆண்களை மயக்குவதில் கைதேர்ந்தவரான பல்லவிசிங், தனது படுக்கையில் பணக்கட்டுகளை அடுக்கி வைத்து அதன் மீது படுத்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் மற்றொரு புகைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பின ரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி திட்டத்தில் பல்லவி சிங்குக்கு மேலும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உதவியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/young-woman-who-seduced-men-and-stole-rs-6-crore-by-spreading-a-web-of-desire-how-was-she-caught




