தமிழ்நாடு பாஜக மாநில பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய அளவிலான அமைப்பு மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கான பொறுப்பாளராக ராம் மாதவுடன், இணைப் பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா மற்றும் டி.கே. அருணா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நிதின் நபின் பிறப்பித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ராம் மாதவ் பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜக தேசிய துணைத்தலைவராக தற்போது உள்ள ராம் மாதவ், இதற்கு முன்பாக தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்து இருந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் பாஜக புதிய பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ஸ்மிருதி இரானிக்கு சத்தீஸ்கர் மற்றும் அரியானா மாநிலங்களுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மாநில பொறுப்பாளராக வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், டெல்லி மாநில பொறுப்பு வினய் சஹஸ்ரபுத்தேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ram-madhav-appointed-as-tamil-nadu-bjps-central-in-charge-nitin-nabin-announces




