கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்' என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தையும், விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டு வருகிறார். அன்புமணி இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி, "குடிநீருக்காக அணை எனக் கட்ட போகிறோம் எனக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பொய் பேசுகிறார். மேகதாது விவகாரத்தில் இளைஞர்கள் போராட சாலைக்கு வாருங்கள். மேகதாது விவகாரத்தில் அணை கட்டினால் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்காது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டுல பேர அரசியல் நடப்பது அசிங்கமாக உள்ளது. அன்புமணி கட்சிகள் வரும் என்று எண்ணாமல் இளைஞர்கள் வாழ்வாதார பிரச்னைக்குப் போராட வாருங்கள். காவிரிக்காக ஜெயிலுக்கு போக நான் தயார்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/pmk-leader-anbumani-about-mekedatu-issue




