காந்திநகர், ஈரானை வீழ்த்துவது மட்டும் போதாது என இந்திய கபடி அணியின் கேப்டன் சுனில் குமார் தெரிவித்துள்ளார். சுனில் குமார் 2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் கபடி போட்டிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்திய ஆண்கள் கபடி அணிக்கு சுனில் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் புரோ கபடி லீக் (PKL) தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யு மும்பா ஆகிய அணிகளுக்காக சுனில் குமார் விளையாடியுள்ளார். புரோ கபடி லீக் வரலாற்றில் 87 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் அவர் வைத்துள்ளார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது புரோ கபடி லீக் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வழிநடத்திய சுனில் குமார், அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத் தந்தார். இந்நிலையில், ஆசிய விளையாட்டு போன்ற மிகப்பெரிய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது குறித்து சுனில் குமார் கூறியதாவது: "புரோ கபடி லீக் எங்களது வீரர்களுக்கு இதற்கு முன்பு கிடைக்காத மிகப்பெரிய மேடையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மாதங்கள் லீக் போட்டிகளில் வெளிநாட்டு ரைடர்கள் மற்றும் டிபென்டர்களுக்கு எதிராகவும், கடுமையான அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளிலும் விளையாடுகிறோம். இந்த அனுபவம் சர்வதேச போட்டிகளுக்கு உதவுகிறது" என்றார். கடும் போட்டி ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அணி இந்தியாவுக்கு கடுமையான சவாலாக இருந்து வருவதாக சுனில் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "கடந்த மூன்று ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஈரான் எங்களது கடினமான போட்டியாளராக இருந்து வருகிறது. 2014-ம் ஆண்டு 2 புள்ளிகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். 2018-ம் ஆண்டு தோல்வியடைந்தோம். மீண்டும் 2023-ம் ஆண்டு 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த முறையும் அவர்களை வீழ்த்துவது மட்டுமின்றி, பெரிய புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெறுவதும் மிகவும் முக்கியம்" என்றார். 2026 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கபடி அணி: சுனில் குமார் (கேப்டன்), பவன் செராவத், அங்கித் ஜக்லான், அஸ்லம் இனாம்தார், அஷு மாலிக், அயான் லோசாப், தேவங்க் தலால், அர்ஜுன் தேஷ்வால், ஜெய்தீப் தாஹியா, ராகுல் சேத்பால், கௌரவ் கத்ரி, சுமித் சங்வான். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/defeating-iran-alone-is-not-enough-indian-kabaddi-team-captain-sunil-kumars-bold-statement




