சென்னை, சென்னை தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் வேலூர் ஆரணியை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் கலைச்செல்வி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்திருந்தனர். பின்னர் மதிய உணவு முடித்து கலைச்செல்வி, நவீன், கார்த்தி மற்றும் கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா ஆகியோர் தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கலைச்செல்வியும், நவீனும் ராட்சத அலையில் சிக்கினர். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கலைச்செல்வி மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நவீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட கலைச்செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing




