சென்னை, தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்(OMCL) மூலம் வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான முறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓமன் நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/ Moulding/ Process Control & CNC Operator), Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection), மற்றும் Maintenance (Exposure in Mechanical /Electrical Maintenance) பணிக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in Foundry area or Manufacturing Industries) Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/ Moulding/Process Control) & CNC Operator, Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Maintenance (Exposure in Mechanical/Electrical Maintenance) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாதவருமானம் குறைந்தபட்சம் ரூ. 44,000/- முதல் ரூ.54,000/ வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 11.10.2026 தேதிக்குள் அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப்எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/job-opportunity-in-oman-men-may-apply-tamil-nadu-government-announcement




