டுப்லின், ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றியின்றி தொடரை தொடங்கின. 2-வது போட்டி இதையடுத்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையை மேலும் அதிகரிக்க ஆப்கானிஸ்தான் அணி முனைப்பு காட்டும். அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடி வரும் அயர்லாந்து அணி வெற்றி பெற்று சமன் செய்யும் நோக்கில் களமிறங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-odi-afghanistan-vs-ireland-clash-today




